ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் அதிகாலை 3.14 மணியளவில் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் அளவு ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவானது. நிலநடுக்கம் 73 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. முன்னதாக அக்டோபர் மாத தொடக்கத்தில், ஆப்கானிஸ்தானில் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது, சுமார் 2,500 பேர் கொல்லப்பட்டனர். 9,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
Tags :