முதலமைச்சர் விஜய் கர்நாடக பயணத்தை தள்ளி வைக்குமாறு கர்நாடகா முதலமைச்சர் டி. கே. சிவகுமார் வேண்டுகோள்
தமிழக முதலமைச்சர் விஜய் ஆகஸ்ட் மூன்றாம் தேதி காவிரி நீர் பங்கீட்டு பிரச்சனை தொடர்பாக கர்நாடகா முதலமைச்சர் டி. கே. சிவகுமாரை சந்தித்து பேச இருந்தார். இந்நிலையில், அங்கு நிலவும் சாதகமற்ற சூழ்நிலையின் காரணமாக பயணத்தை தள்ளி வைக்குமாறு கர்நாடக முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். நேற்று டெல்லியில் நடந்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு நால்வரும் ,3500 கன அடி வீதம் தண்ணீரை திறந்து விடுமாறு உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகாவின் மாண்டியா போன்ற பகுதிகளில் கர்நாடக அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். போராட்டத்தின் காரணமாக தமிழக முதலமைச்சர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தின் போஸ்டர்களையும் திரையரங்கின் முன்பாக வைக்கப்பட்டிருந்த கட்டமைப்புகள் பேனர்களையும் போராட்டக்காரர்கள் கிழித்து காட்சிகள் தொடராமல் செய்து வருகின்ற சூழல் நிலவுவதால் இப்பொழுது இரு முதலமைச்சர்களும் சந்தித்து சுகமாக பேசுவதற்கு உகந்ததாக இல்லை என்பதால் இந்த பயணத்தை தள்ளி வைக்குமாறு கர்நாடகா முதலமைச்சர் டி கே சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags :


















