திருப்புவனம் இளைஞர் விவகாரம் - முதல்வர் அறிவிப்பு

திருப்புவனம் இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில், காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் கஸ்டடியில் இருந்த இளைஞர் அஜித் குமார் கொலை செய்யப்பட்டார். இந்த விவகாரம் குறித்து பேசிய தமிழ்நாடு முதல்வர், "திருப்புவனம் விவகாரத்தில் தகவல் தெரிந்ததும் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். உயர் அதிகாரி மீது இன்று (ஜூலை 01) நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது" என பேசினார்.
Tags :