முதல்வர் ஸ்டாலின் இரங்கல்.....5 லட்சம் இழப்பீடு

கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், 2 மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன் என முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரின் X பதிவில், "உயிரிழந்த மாணவர்கள் நிவாஸ், சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் - உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல், ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன். உயர் சிகிச்சைக்கு அமைச்சர், ஆட்சியரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உயிரிழந்த குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Tags :