நாகேந்திரனை கட்டிபிடித்து அன்பை வெளிப்படுத்திய  சபாநாயகர் அப்பாவு. 

by Staff / 08-07-2025 11:04:30am
நாகேந்திரனை கட்டிபிடித்து அன்பை வெளிப்படுத்திய  சபாநாயகர் அப்பாவு. 

தமிழகத்தின் ஆன்மீகச் சிறப்புமிக்க திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலின் 519-வது ஆண்டு ஆனிப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று காலை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது.தமிழ்நாடு சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, காங்கிரஸ் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.முன்னதாக தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவரும்,சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திறன் கலந்துகொண்டார்.அப்போது அவர் சபாநாயகருக்கு பொன்னாடை அணிவித்து கவுரவப்படுத்திய நிலையில் சபாநாயகர் அப்பாவு நயினார் நாகேந்திரனை கட்டிபிடித்து பாசத்தை வெளிக்காட்டினார். 

 

Tags : The Speaker, who embraced Nagendran and expressed his love, was his father.

Share via