பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

by Staff / 08-07-2025 10:47:02am
 பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்து எடப்பாடி பழனிசாமி இரங்கல்.

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளாகியதில் 2 மாணவர்கள் உயிரிழந்ததாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும், தவறு இழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறார். உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

 

Tags : Edappadi Palaniswami condoles the accident in which a train hit a school van.

Share via