ராமதாஸ் தலைமையில் செயற்குழு, அன்புமணி தலைமையில் நிர்வாக குழு பாமகவினர் குழப்பம்.

திண்டிவனம் ஓமந்தூரில் பாமக செயற்குழு கூட்டம் இன்று (8ம் தேதி) காலை 10 மணிக்கு ராமதாஸ் தலைமையில் கூடுகிறது. இந்த கூட்டதில் பாமக தலைமை நிர்வாகிகள், பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 550 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.இதனிடையே சென்னை தியாகராயர் நகரில் உள்ள அலுவலகத்தில் அன்புமணி தலைமையில் இன்று பாமக நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமதாஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டியுள்ள நிலையில் நிர்வாகக் குழு கூட்டத்துக்கு அன்புமணி அழைப்பு விடுத்துள்ளார். ராமதாஸ் தலைமையில் செயற்குழு, அன்புமணி தலைமையில் நிர்வாக குழு கூடுவதால் பாமகவினர் குழப்பம் அடைந்துள்ளனர்.
Tags : PMK members in confusion as executive committee headed by Ramadoss, administrative committee headed by Anbumani