உதயநிதிக்கு கடிவாளம் போடச் சொல்லும் சிவசேனா

by Staff / 08-09-2023 11:03:05am
உதயநிதிக்கு கடிவாளம் போடச் சொல்லும் சிவசேனா

உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை தமிழ்நாட்டுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் என்று சனாதனம் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர் உதயநிதிக்கு சிவசேனா (உத்தவ்தாக்கரே) கட்சி பதிலளித்துள்ளது. இதுபற்றி பதில் அளித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், சனாதனம் குறித்த கருத்துக்களை உதயநிதி தனக்குள்ளும், தமிழ்நாட்டிற்குள்ளும் வைத்துக் கொள்ள வேண்டும். இதுபோன்ற சர்ச்சை கருத்துக்களை கூட்டணி கட்சியான திமுக கூறினால், அதனை பாஜக அரசியலுக்காக பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் நடத்தும் என்று அறிவுறுத்தியுள்ளார். 28 எதிர்க்கட்சிகளைக் கொண்ட 'இந்தியா' கூட்டணியில் காங்கிரஸ், திமுக, சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.

 

Tags :

Share via

More stories

Logo