இன்று தேர்தல்-அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் .

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெறப் போகிறார்கள் என்று உலகமே காத்துக் கொண்டிருக்கிறது. குடியரசு கட்சி சார்பாக இந்திய வம்சா வழியைச் சார்ந்த கமலாஹாாிசு ஜனநாயக கட்சியைச் சார்ந்த முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பும் போட்டியிடுகின்றனர். வந்துள்ள கருத்து கணிப்பின்படி கமலா ஹாாிசு வெற்றி பெறுவார் என்கிற நிலையில்... திரும்பவும், ட்ரம்ப் அவருக்கு ஈடு கொடுக்கும் வகையில் வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் பிரச்சாரத்தில் தன்னை நோக்கி சுடப்பட்ட போது ,அதிலிருந்து தான் கடவுளின் அருளால் தப்பியதாகவும் கடவுள் தனக்கு மீண்டும் அதிபர் பதவியை தருவதற்காகவே அவ்வாறு காப்பாற்றினார் என்று ட்ரம்ப் தனது பிரச்சாரக் கூட்டங்களில் சொல்லி வருகின்றார்.. பல அமெரிக்க வாக்காளர்கள் ஏற்கனவே நேரில்- அஞ்சல் மூலம் முன்கூட்டியே வாக்குகளை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
.செவ்வாய்க்கிழமை பதிவு செய்யப்பட்ட வாக்கு சாவடிகளில் வாக்காளர்கள் நேரில் சென்று சாவடிகளில் வாக்களிப்பார்கள்.. அமெரிக்காவைப் பொறுத்தமட்டில் பெடரல் தேர்தல் ஆணையம் கூட்டாட்சி பிரச்சார நிதி சட்டங்களை செயல்படுத்துவதோடு நன்கொடைகளை கண்காணித்து ஜனாதிபதி பிரச்சாரத்திற்கான பொது நிதி உதவி உள்பட, ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ளூர் அலுவலர்கள் தேர்தல்களை நடத்துகிறார்கள்.. இந்த உள்ளூர் அதிகாரிகள் மாநிலம் மற்றும் கூட்டாட்சி சட்டங்களை கடைபிடித்து அமெரிக்க அரசியல் அமைப்பை வழி நடத்துகிறார்கள்.
மாநிலங்களுக்கு இடையே தேர்தல் விதிமுறைகள் மாறுபட்டாலும் ஒருங்கிணைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட உள்ளூர் நிறுவனங்கள் அமெரிக்காவின் தேர்தல்களை நிர்வகித்து வருகின்றன.
இங்கு நடைபெறும் தேர்தல் வாக்களிக்கும் நேரமானது மாகாணங்களின் அடிப்படையிலும் நகராட்சியின் நிர்வாகத்தின் அடிப்படையிலும் மாறுபாடு அடையக்கூடியது. மாகாணங்களின் சீதோசன நிலையை அடிப்படையாகக் கொண்டு வாக்கு சாவடிகளில் வாக்குப்பதிவு நேரங்கள் தீர்மானிக்கப்படுகின்றன.
குறிப்பாக, ஜார்ஜியா ,பென்சில் வேனியா, ஐயோவா, ப்ளோரிடா போன்ற மாநிலங்களில் காலை 7 மணி முதல் 8 மணி வரையும் வாக்கெடுப்புகள் நடைபெறும். ஹவாய் போன்ற இடங்களில் உள்ளுர் நேரப்படி காலை 7 மணி- இரவு 7 மணி முதல் மற்றும் அதிகாலை ஒரு மணி வரை வாக்கெடுப்பு நடைபெறும்.
அமெரிக்கா வாக்குச்சாவடிகள் , பொதுவாக இருக்கின்ற மாநாட்டு மையங்கள், நூலகங்கள், பள்ளிகள், சமூக கூடங்கள் போன்ற கட்டடங்களிலே வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் போன்று இயந்திரங்களில் வழியாக வாக்களிக்கும் முறைக்கு மாறாக, வாக்காளர்கள் கையால் குறிக்கப்பட்ட காகித வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தி தங்களுக்கு விருப்பமான வேட்பாளரின் பெயருக்கு அடுத்ததாக ஒரு சதுர கட்டத்தை நிரப்பும் நிலையில் அடையாளப்படுத்தப்படுகிறது.
அமெரிக்காவை பொறுத்தவரை எழுபது விழுக்காடு நேரடியாக வாக்குச்சீட்டு அடிப்படையில் வாக்குகளை பதிவு செய்கிறார்கள்... சில இடங்களில் டிஜிட்டல் அடிப்படையான வாக்குச்சீட்டு குறியிடும் பி . டி .எஸ் முறையும் உள்ளது. குறைந்த வாக்காளர்களைக் கொண்ட பகுதியில் நேரடியாக மின்னணு பதிவின் மூலம் வாக்களிக்கும் முறையை தேர்ந்தெடுத்து வாக்களித்து வருவதாகவும் சொல்லப்படுகிறது. இது போன்ற முறையை இந்தியானா, லூசியானா ,மிசிசிப்பி , டெக்சாஸ் போன்ற மாநிலங்கள் பின்பற்றுவதாகவும் தகவல்கள் சொல்கின்றன.
அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்களில் 3 மாநிலங்களைத் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் தேர்தலுக்கு முந்தைய நாளில் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர். அமெரிக்காவில் 230 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர் ஆனால், 160 மில்லினர் மட்டுமே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் என்றும் அனைவரும் உண்மையில் வாக்களிப்பாளர்களா என்பது சந்தேகமே.
கிட்டத்தட்ட 35 மாநிலங்களில் வாக்காளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தேர்தல் அடையாள அட்டையை காட்டியே வாக்களிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது .இந்த புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அட்டை இல்லை எனிலும் ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட் போன்றவைகளை வைத்தும் தேர்தலில் வாக்களிக்கலாம்.
15 மாகாண வாக்காளர்கள் எந்த அடையாள அட்டையும் வாக்குச்சாவடிகளில் காட்டாமல் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு வாக்களிக்கப்படுகின்ற வாக்காளர்கள் உடைய வாக்குச்சீட்டை ஆப்டிகல் ஸ்கேனர்களை பயன்படுத்தி டிஜிட்டல் முறையில் அட்டவணைப்படுத்தப்பட்டு தேர்தல் முடிவுகள் சொல்லப்படுகின்றன.
அமெரிக்க பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்டில் உள்ள எண்ணிக்கையிலான வாக்காளர்களை அதாவது 538 வாக்காளர்கள் கட்சிகளால் நியமிக்கப்படுபவர்கள் அல்லது கட்சியை நிர்வாகிகள் வேட்பாளர்களுக்கு கிட்டத்தட்ட 270 பேர் ஆதரவாக இருந்தால் இந்த வாக்காளர்கள் டிசம்பர் 17ஆம் தேதி அதிபர் துணை அதிபர்களை தேர்ந்தெடுக்க வாக்களிக்க உரிமை வழங்கப்பட்டுள்ளது.
Tags :