டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா: கோலாகல துவக்கம்

by Editor / 24-07-2021 04:53:36pm
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா: கோலாகல துவக்கம்


205 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா கோலாகலமாக துவங்குகிறது.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக், 1896-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது.

உலக போர் காரணமாக 3 முறை ரத்தானது. கடைசியாக 2016-ம் ஆண்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் ஒலிம்பிக் போட்டி அரங்கேறியது. இந்த நிலையில் 32-வது ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 3வது முறையாக கடந்த ஆண்டு நடைபெற இருந்தது.

ஏற்பாடுகள் எல்லாம் முடிந்த நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை பூதாகரமாக எழுந்ததை அடுத்து போட்டி இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டது. ஜப்பானில் இப்போதும் கொரோனா பரவல் அச்சுறுத்தல் நிலவுவதால் அங்கு ஒலிம்பிக்கை நடத்த கடும் எதிர்ப்பு, போராட்டங்கள் நடந்தன. போட்டியில் கலந்து கொள்ளும் வீரர்கள் மற்றும் போட்டி ஏற்பட்டாளர்கள் பலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்துப்பட்டுள்ளனர்.

அவர்கள் போட்டியிலிருந்தும் விலகியுள்ளனர். எனினும், இந்த ஆண்டு போட்டியை நடத்துவதில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியும், ஜப்பான் அரசும் உறுதியாக உள்ளன. அதனால் எந்த பிரச்னையுமின்றி ஒலிம்பிக் போட்டி தொடங்கியது.
உலகம் முழவதிலும் இருந்து இந்தியா உட்பட 205 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் தொடக்கவிழா டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி  மாலை 4.30 மணிக்கு தொடங்கிய து.  கண்கவர் கலைநிகழ்ச்சிகள், லேசர் ஒளிக்கற்றையால் அந்தரத்தில் மிளிரும் டிரோன் ஜாலங்கள், சிலிர்க்க வைக்கும் வாணவேடிக்கைகள் என்று பிரமாண்டம் இருந்தது.. ஜப்பானின் வரலாறு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் கலாசார நிகழ்ச்சிகளும் முக்கியத்துவம் பெறும். கடந்த 121 நாட்களாக ஜப்பானை வலம் வந்த ஒலிம்பிக் தீபம் தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் கொண்டு வரப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது.


விழாவின் முக்கிய அம்சமாக 205 நாட்டு அணியினரும் தங்களது தேசிய கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து வந்தனர் . இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் கொரோனா கட்டுப்பாடு காரணமாக தொடக்க விழாவில் இந்திய தரப்பில் 6 அதிகாரிகள், 22 வீரர், வீராங்கனைகள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் தெரிவித்துள்ளது.


தொடக்கவிழா நிகழ்ச்சிகளை நேரில் பார்க்க, போட்டிகளை கண்டு ரசிக்க பொதுமக்களுக்கு அனுமதியில்லை. அதனால் போட்டிகள் அனைத்தும் பூட்டிய அரங்கில் நடக்கும். கால்பந்து, ஹாக்கி, டென்னிஸ், தடகளம் உள்பட குழு, தனிநபர் என 46 வகையான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

மொத்தம் 11,683 வீரர்கள் பங்கேற்கின்றனர். இவர்களை தவிர பயிற்சியார்கள், அணி மேலாளர்கள், உதவியாளர்கள், மருத்துவர்கள், முடநீக்கியல் நிபுணர்கள் என 205 நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள் இப்போது ஜப்பானில் முகாமிட்டுள்ளனர்.


டோக்கியோவில் உள்ள தேசிய ஸ்டேடியத்தில் (ஒலிம்பிக் பிரதான அரங்கு) இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு ‘ஒலிம்பிக் சுடர்’ ஏற்றும் நிகழ்வுடன் ஒலம்பிக் போட்டி தொடங்குகிறது. ஜப்பான் மன்னர் நாருஹிடோ போட்டியை தொடங்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சூகா, சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் தலைவர் தாமஸ் பாக் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, உலக தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உள்பட 1000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டின் பாரம்பரியப் பெருமையை விளக்கும் வகையிலான கலைநிகழ்ச்சிகள், கண்கவரும் வாண வேடிக்கை நிகழ்ச்சிகள், பார்வையாளர்களை பிரமிக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


டோக்கியோ ஒலிம்பிக்சில் இதுவரை இல்லாத அளவுக்கு 119 வீரர், வீராங்கனைகள் இந்தியா சார்பில் பங்கேற்கின்றனர். இவர்களோடு பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் என மொத்தம் 228 பேர் அடங்கிய பிரமாண்ட இந்திய குழு டோக்கியோ சென்றுள்ளது.
இதற்கிடையில், ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கிவிட்டன. பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்சி போட்டிகள், தகுதிச்சுற்று போட்டிகள் என பல்வேறு கட்டங்களாக போட்டிகள் ஏற்கனவே நடைபெற்று வருகின்றன.


டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை பிரிவில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு தகுதி சுற்று இன்று காலை நடைபெற்றது. இதில் இந்திய வீராங்கனை உள்பட 64 பேர் கலந்து கொண்டார்கள். ஒரு சுற்றுக்கு 6 அம்பு என 72 முறை ஒவ்வொரு வீராங்கனைகளும் அம்புகளை எய்தனர். இதில் தென் கொரிய பெண் வீராங்கனைகள் முதல் மூன்று இடத்தை பிடித்து உள்ளனர். இந்திய வீராங்கனை தீபிகா குமாரி 9-வது இடம் பிடித்து உள்ளார்.துடுப்பு படகு போட்டியின் முதல்சுற்றுகள்  நடைபெற்றது.

 

Tags :

Share via