குடும்ப தகராறில் கனவனை கொன்ற மனைவி

மேட்டூர் அடுத்த கொளத்தூர் அருகே கொசவன்கரடு பகுதியில் வசிக்கும் லாரி டிரைவர் சக்தி (42) அவரது மனைவி மணிமுடி (35)இவர்களுக்கு கேந்திரியா (11) என்கிற மகள் உள்ளார். இவர் தனியார் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று இரவு லாரி டிரைவர் சக்தி வீட்டுக்கு மது போதையில் வந்து மனைவி மணிமுடியிடம் தகராறு செய்துள்ளார்.இதனால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மனைவி மணிமுடி கணவர் சக்தியை இரும்பு கம்பியால் தலையில் அடித்துள்ளார். இதில் கணவர் சக்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் காவல் நிலைய போலீசார் உடலை மீட்டு மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags :