நரிக்குறவபெண்கள் மட்டுமின்றி ஆண்களும் படித்து சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர்கள் இலவச வீட்டுமனைப் பட்டாக்களையும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் பாராளுமன்ற திமுக குழுத் துணைத் தலைவரும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ,அமைச்சர் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் 52 நரிக்குறவ குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து 500க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் செல்போன்கள் தையல் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான நலத்திட்டங்களை வழங்கப்பட்டது.தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி இந்த விழாவில் பேசியதாவது:
நரிக்குறவ இன பெண்களுக்கு, சிறு வயதிலே திருமணம் செய்து வைக்கப்படுவதை காணமுடிகிறது. இதை ஒழிக்க, பெண்கள் அனைவரும் கல்வி கற்க வேண்டும். அதன் மூலம் இந்த (நரிக்குறவர்கள்) சமுதாயம் நல்ல நிலைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. பெண்கள் அனைவரும் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற வகையில் தான் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் மாதம் வழங்குவதற்கு தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த விஷயத்தில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் படித்து சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க வேண்டும் என்பதுதான் திமுக அரசின் விருப்பமும்கூட” என்றார்.
Tags :