1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை - டிஎன்பிஎஸ்சி தகவல்

by Staff / 19-11-2022 03:56:04pm
1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை - டிஎன்பிஎஸ்சி தகவல்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 1080 மையங்களில் இன்று நடைபெற்றது. சென்னையில் மட்டும் 149 இடங்களில் நடைபெற்றது. இந்த தேர்வு காலை 9:30 மணி தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடந்தது. தேர்வுக்கு அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வர்கள் தேர்வறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இந்த தேர்வை எழுத 3,22,414 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 1,90,957 பேர் மட்டுமே தேர்வை எழுதியுள்ளனர். 1,31,457 பேர் தேர்வு எழுதவில்லை என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via

More stories