அறநிலையத்துறையில் போலிநியமனம் - ஆதாரத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை சேகர்பாபு

மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்மலை மீதுள்ள ராக்காயி அம்மன் திருக்கோவிலில் குடமுழுக்கு விழா மற்றும் சோலைமலை முருகன் கோவிலில் வெள்ளிக் கதவுகள் பொருத்தும் பணி உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு பத்திரப்பதிவு துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்டர் வந்திருந்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலை துறையில் போலி நியமனம் நடைபெற்றது ஆதாரத்துடன் தெரிய வந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் மேலும் தமிழகத்தில் 48 முதுநிலை ஆலயங்களில் பக்தர்களின் செல்போன் பயன்பாட்டிற்கு தடை விதிப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், திமுக அரசு பொறுப்பேற்றவுடன் வெளிநாடுகளில் இருந்து 10 சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அப்போது தெரிவித்தார்
Tags :