ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிட்ட குழந்தைகளுக்கு உடல் உபாதை

திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து மாத்திரையினால் குழந்தைகளுக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை செயலாளர் செந்தில்குமார், குழந்தைகள் அனைவரும் நலமுடன் உள்ளனர். மாத்திரைகளின் மாதிரிகள் பரிசோதனை மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மாத்திரையில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டுள்ளதா? அல்லது பள்ளிகளில் மாத்திரை வழங்கும்போது மாணவர்கள் உணவு அருந்துவதற்கு முன்னதாக மாத்திரை வழங்கப்பட்டதா என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுகுறித்து அந்த மாவட்ட ஆட்சியருக்கு என்ன பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்த விவரங்களை தெரிவிக்கும்படி உத்தரவு போடப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
Tags :