அமெரிக்கா 68- வது கிராமி விருதுகள் திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

by Admin / 03-02-2026 02:37:35am
அமெரிக்கா 68- வது கிராமி விருதுகள்  திபெத்திய புத்த மத தலைவர் தலாய் லாமாவுக்கு  அளிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்சில் நடைபெற்ற 68 வது கிராமி விருதுகள் விழாவில் திபெத்திய புத்த மத தலைவர் தலாய்லாமா தனது 90 வது வயதில் இந்த விருதை பெற்றுள்ளார். சிறந்த ஆடியோ புத்தக விவரிப்பு மற்றும் கதை சொல்லல் பதிவு என்ற பிரிவின் கீழ் இவ்விருது அவருக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவரது மென்மையான ஆன்மீக உரைகளை கொண்ட தி  ரெஃப்ளெக்சன் ஆஃப் ஹிஸ் கோலிநெஸ் தி தலாய்லாமா என்ற ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. பிரபல இசைக் கலைஞரான சரோத் அம்ஜத் அலி கான் மற்றும் அவரது மகனான ஆமான் அலி பங்காஸ், அயன் அலி பங்காஸ் ஆகியோரின் இசையமைப்புடன் இந்த ஆடியோ புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. வயது மூப்பின் காரணமாக, இந்த விழாவில் தலாய்லாமா கலந்து கொள்ளவில்லை. அவருக்கு பதிலாக இசைக்கலைஞர் ரூபஸ் வைன்ரைட் விருதை பெற்றுக் கொண்டார்.

 

Tags :

Share via

More stories

Logo