இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல்.

by Admin / 03-02-2026 02:43:48am
இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒப்புதல்.

இந்திய பொருள்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ் ஒப்புதல் தெரிவித்துள்ளார். கடந்த 2025 ஆகஸ்ட் முதல் இந்தியாவிற்கு 25% வரியிலிருந்து ரஷ்யா என்னை கொள்முதல் செய்ததற்காக கூடுதலாக 25% அபராத வரி என மொத்தம் 50 சதவீத வரியை அமெரிக்கா விதித்திருந்தது. இந்நிலையில் ரஷ்யாவில் இருந்து என்னை வாங்குவதை இந்தியா நிறுத்தினால் வரியை குறைப்பதாக அமெரிக்க அதிபர் தெரிவித்திருந்தார். இதனை இந்தியா ஒப்புக்கொண்டுள்ளதாக ட்ரம் தனது ரூத் சோசியல் பதிவில் தெரிவித்திருந்தார் . ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதற்கு பதிலாக அமெரிக்காவிலிருந்தும் வெனிசுலாவிலிருந்தும் இந்தியா அதிகப்படியான எண்ணையை வாங்கும் என்று அறிவித்ததை அடுத்து அமெரிக்கா பொருள்கள் மீது இந்தியா விதித்துள்ள வரிகள் மற்றும் இதர வர்த்தக தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க பிரதமர் மோடி ஒப்புக் கொண்டுள்ளதாகவும் ட்ரம் குறிப்பிட்டுள்ளார் . எரிசக்தி தொழில்நுட்பம் விவசாயம் மற்றும் நிலக்கரி போன்ற துறைகளில் 500 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பொருள்களை வாங்க இந்தியா சம்மதம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தமது எக்ஸ் வலைதள பதிவில் இந்த வரி குறைப்பிற்காக அமெரிக்க அதிபருக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக, இந்திய தயாரிப்புகள் மீதான வரி 18 சதவீதமாக குறைக்கப்பட்டது. மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் இது இரு நாடுகளின் வளர்ச்சிக்கு உதவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் நரேந்திர மோடி எனது நெருங்கிய நண்பர் என்றும் ரஷ்ய எண்ணெய் கொள்முதலே இந்தியா நிறுத்துவது ஊக்கரை போரை முடிவுக்கு கொண்டு வர உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் கொள்முதலை நிறுத்துவது குறித்து இந்திய அரசிடம் இருந்து எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியிடப்படவில்லை.

 

Tags :

Share via

More stories