சாலை விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பலி

தெலுங்கானாவில் பயங்கர சாலை விபத்து நடந்து 4 உயிர்களை பறித்துள்ளது. ரங்காரெட்டி மாவட்டம் தும்மனூரில் டிசிஎம் வாகனம் மீது கார் மோதியது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் கேசவு (35), ஸ்ரீனிவாஸ் (30), யாதயா (34), ராமசாமி (32) என அடையாளம் காணப்பட்டனர். இவர்கள் அனைவரும் நாகர் கர்னூல் மாவட்டம் வெல்தண்டா மண்டலத்தை சேர்ந்தவர்கள் என போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடல்களை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.
Tags :