பஞ்சாபில் என்னை சீமான் அண்ணான்னு தான் கூப்பிடுவாங்க

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானிடம், விஜய்யையும் அண்ணா என்று அழைக்கிறார்கள். தங்களையும் அண்ணா என்று அழைக்கிறார்கள். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன என செய்தியாளர்கள் கேட்டபோது, எங்க கட்சியில் வயதில் பெரியவர்களும் என்னை அண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். பஞ்சாபில் எல்லாம் 85 வயது, 75 வயது பெரியவர் எல்லாம் என்னை சீமான் அண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். சீக்கியர்கள் எல்லாம் சீமான் அண்ணா, சீமான் அண்ணா என்றுதான் கூப்பிடுவார்கள். அது அன்பின் மிகுதியால் வரும் சொல் என கூறியுள்ளார்.
Tags :