இளையன்குடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

by Staff / 19-04-2024 12:06:39pm
இளையன்குடி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு

தமிழகத்தில் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.19) காலை 7 மணிக்கு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி தமிழகத்தில் 12.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சித்தூரணியில் சாலை வசதி இல்லாதது, நகர் பகுதியில் கழிவுநீர் வருவது உள்ளிட்ட பிரச்சினை தொடர்பாக கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பில் ஈடுபட்டனர். இதனால் அந்த வாக்குச் சாவடியில் 4 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது. இந்த கிராமத்தில் 850 வாக்காளர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via

More stories