சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 நாளை காலை 11:50க்கு பயணம்.

by Editor / 01-09-2023 08:56:36am
சூரியனை நோக்கி ஆதித்யா எல்-1 நாளை காலை 11:50க்கு பயணம்.

ஆதித்யா-எல்1 விண்கலத்தை சூரியனை நோக்கி அனுப்புவதற்கான கவுண்டவுன் செப்டம்பர் 2 ஆம் தேதி நாளை காலை 11:50க்கு பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட் மூலம் ரூ.423 கோடி செலவில் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து "ஆதித்யா எல்.1-ஐ அனுப்ப தயாராகி வருகிறோம். ராக்கெட் மற்றும் செயற்கைக்கோள் தயாராக உள்ளன" என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். ஆதித்யா எல் 1 விண்கலத்தில் உள்ள 7 அதிநவீன கருவிகள், சூரியனின் ஒளிக்கோளம், குரோமோஸ்பியர், வெளிப்புற அடுக்கு உள்ளிட்டவைகளை துல்லியமாக ஆய்வு செய்யும்.

 

Tags : சூரியனை நோக்கி ஆதித்யா

Share via