2021 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

by Editor / 05-10-2021 03:47:39pm
2021 இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு

2021 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது.இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள்  (அக்.5, திங்கள்கிழமை) முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில்இயற்பியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, அமெரிக்காவின் ஸ்க்யூரா மனாபே, ஜெர்மனியின் கிளாஸ் ஹசில்மேன், இத்தாலியின் ஜார்ஜியோ பரிசி ஆகிய மூன்று விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via
Logo