. வெற்றி பெறும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு.. உங்களுக்காக நான் காத்திருப்பேன்- விஜய்
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முன்னதாக பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் தனது கட்சி வேட்பாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். வெற்றி பெறும் வேட்பாளர்கள் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு வேறு எங்கும் செல்லாமல் உடனடியாக பனையூர் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.. உங்களுக்காக நான் அங்கே காத்திருப்பேன் என்றும் அவர் வேட்பாளர்களிடம் தெரிவித்தார் மே 4-ஆம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையின் போது வேட்பாளர்கள் அனைவரும் வாக்கு என்னும் மையங்களில் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.. கட்சியினரின் ஆசை வார்த்தைகளுக்கு பலியாகாமல் கட்சி மாறாமல் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.. தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளின் அடிப்படையில் இந்த ஆலோசனைகளை அவர் தெரிவித்தார்..
Tags :


















