தூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி

by Editor / 04-08-2024 04:05:13pm
தூத்துக்குடியில் விஷ வாயு தாக்கி 2 பேர் பலி

தூத்துக்குடி தாளமுத்து நகர் நேரு காலனியில் விஷவாயு தாக்கி 2 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஷவாயு தாக்கியதில் நேரு காலனி ஆனந்த் நகர் பகுதியை சேர்ந்த கணேசன், மாரிமுத்து ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர். நீண்ட நாட்களாக மூடிக்கிடந்த கிணற்றை திறந்து சுத்தம் செய்தபோது இருவரையும் விஷவாயு தாக்கியுள்ளது. பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவனையில் இருவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் உயிரிழந்துள்ளனர்.

 

Tags :

Share via