சிறந்த மாநகராட்சியாக தேர்வானது தஞ்சை மாநகராட்சி... சுதந்திர தினத்தில் முதலமைச்சர் விருது வழங்குகிறார்..
தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக தஞ்சாவூர் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், தமிழகத்தில் சிறப்பாக செயல்படும் மாநகராட்சி மற்றும் சிறந்து விளங்கும் 3 நகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டு, முதல்வர் விருது வழங்கப்பட்டு வருகிறது.
அவ்வகையில், இந்தாண்டு சிறந்த மாநகராட்சியாக தேர்வாகியுள்ள தஞ்சை மாநகராட்சிக்கு 25 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் விருதினை, சுதந்திர தின விழாவில் முதலமைச்சர் மு.க.
ஸ்டாலின் வழங்க உள்ளார்.
மேலும், சிறந்த நகராட்சிகளுக்கான முதல் பரிசுக்குத் தேர்வாகியுள்ள உதகைக்கு 15 லட்சம், 2ஆம் பரிசை பெறும் திருச்செங்கோட்டிற்கு 10 லட்சம் மற்றும் 3ஆம் பரிசுக்கு தேர்வாகியுள்ள சின்னமனூர் நகராட்சிக்கு 5 லட்ச ரூபாயும், விருதுகளும் வழங்கப்பட உள்ளன.
Tags :



















