ஜங் புட் என்று சொல்லப்படுகிற பதப்படுத்தப்பட்ட உணவை நாம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
நாம் ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால், உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். உடல் நலனை பொறுத்து வாழ்க்கை நலமுடன் அமையும். உடலின்றி உயிர் இயங்காது .நம் முன்னோர்கள் சொல்வார்கள்
. உடலார் அழியின் உயிராா் அழிவர் என்று ,சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும் .அதனால், எந்த உணவு, நம் உடலுக்கு தேவையோ....... அதில் சத்துக்கள் எவ்வளவு உள்ளதோ... அந்த உணவுகளை மட்டுமே, நாம் உட்கொண்டால் ஆரோக்கியத்துடனும் நலத்துடனும் வாழ முடியும். இதில், நாம் கவனக்குறைவாக இருந்தோம் என்றால், நாம் சம்பாதிக்கின்ற பணம் மருத்துவரிடமும் மாத்திரை மருந்துகளுக்கும் செலவிட கூடியதாகவே சென்று விடும். அதனால், நம்மளுடைய ஆரோக்கியத்தில் சில வரைமுறைகளை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவு என்பது பழங்கள் ,காய்கறிகள் ,முழு தானியங்கள் மெலிந்த புரதங்கள் மற்றும் நல்ல இயற்கையாக விளைந்த பருப்பு வகைகள் அடங்கும்.
நம் உடல் நல்ல முறையில் செயல் புரிவதற்கும் நோய்களை எதிர்த்து போராடுவதற்கும் நோயை தடுப்பதற்கும் ஆனா ஊட்டச்சத்துக்களுடன் கூடிய உணவு அவசியம் அந்த உணவில் ஆரோக்கியமான கொழுப்புகள் இருப்பது அவசியம் .முழு தானியங்கள் பின் பருப்பு வகைகள், மீன், முட்டை, வெண்ணெய், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் ,ஆலிவ் எண்ணெய் வழியாக கிடைக்கப்படுகின்ற புரத விட்டமின் சத்துக்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றன..
ஜங் புட் என்று சொல்லப்படுகிற பதப்படுத்தப்பட்ட உணவை நாம் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இந்த உணவில் முழு நிறைவுற்ற கொழுப்பு கரை மற்றும் ஊட்டச்சத்து அற்ற வெற்று கலோரிகள் அதிகமாக காணப்படக்கூடியவை .இது நம்முடைய உடல் வளர்ச்சிக்கு எதிரான விளைவுகளை உருவாக்கும். இதன் மூலமாக ,நம் உடம்பில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகும். சிப்ஸ், குக்கிகள், கேக்குகள், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற உணவுப் பொருட்கள் பீட்சா ,பாஸ்டா, பர்கர், ப்ரெஞ்ச் ப்ரை போன்ற உணவுகள் எல்லாம் நம்மளுடைய நாக்கின் ருசியையும் உடனடி தேவையும் பூர்த்தி செய்யக் கூடிய உணவுகளாக இருந்தாலும் இவை நம்மளுடைய ஆரோக்கியத்தை கெடுக்கக் கூடியவை.
மிக எளிதாக இதய நோய்- சர்க்கரை நோய்-, உடல் தளர்ச்சி -உடல் பருமன் போன்ற பல்வேறு நோய்களை நமக்கு மெல்ல மெல்ல தந்து, நம்மளுடைய உடல் ஆரோக்கியத்தை, நம் உடல் வலிமையை குறைத்து ,நோயாளியாக மாற்றக்கூடிய உணவுகள். ஆகவே, நாக்கின் சுவைக்காக- நாம் எண்ணையில்- மசனாக்கள் தூவப்பட்ட ப்ரைட் ரைஸ், நூடுல்ஸ் ,சர்வமா, அத்தோ போன்ற உணவுகள் எல்லாம் நம்மை பலகீனம் அடையச் செய்யக் கூடியவை .முழு தானியங்களை, பச்சைப்பயிறு, உளுந்து ,வேர்க்கடலை இன்னவரை இயற்கையாக விளையக்கூடிய தானியங்களை எல்லாம் நாம் அவித்து -உடைக்காமல் சாப்பிடப்படுகின்ற உணவுகள் அனைத்தும் நமக்கு ஆரோக்கியம் தரக்கூடியவை .ஆகவே ,எந்த உணவை சாப்பிட வேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும் இரண்டு நாள் மூன்று நாள் பயன்படுத்தப்பட்ட எண்ணைகள் தான் உணவு விடுதிகளில் இன்றைக்கு அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவைகள் எல்லாம் நம்முடைய உடலை- நம்மளுடைய இதயத்தை பாதிப்படையச் செய்யக் கூடியவை .அதனால் இயற்கையாக நம் முன்னோர்கள் காலம் காலமாக பயன்படுத்தி வந்த உணவுகளை- சமைத்த உணவுகளை- நாம் சாப்பிட்டு வந்தால், நம்மளுடைய ஆரோக்கியம் சரியான முறையில் இருக்கும்.
Tags :