குடும்பத்தை சேர்ந்த மூன்று பேரை சுட்டுக் கொன்ற சிறுவன்

ஸ்பெயின் நாட்டின் துறைமுக நகரமான அலிகாண்டேவிற்கு அருகில் உள்ள எல்சேக் கிராமத்தில் 15 வயது பள்ளி மாணவன் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றுள்ளன.
தாய் மகனை கண்டித்தது தொடர்பாக இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வீட்டில் இருந்த வேட்டையாடும் துப்பாக்கியால் முதலில் தாயையும், பின்னர் தனது 10 வயது சகோதரரையும், தொடர்ந்து தனது தந்தையையும் அந்த சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான்.
3 நாட்களுக்கு பிறகு அந்த வீட்டிற்கு சென்ற உறவுக்கார பெண்ணிடம் அந்த சிறுவன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளான்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சடலங்களை கைப்பற்றி சிறுவனை கைது செய்துள்ளனர்.
Tags :