துவங்கியது தென்மேற்கு பருவமழை -2022

கேரளா மற்றும் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை இன்று துவங்குகிறது. இன்று கன்னியாகுமரி தென்காசி மாஞ்சோலை கோதையாறு வால்பாறை நீலகிரி கொடைக்கானல் பழனி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்யும்.
வெப்பசலனம் காரணமாக தூத்துக்குடி மதுரை சிவகங்கை திண்டுக்கல் இராமநாதபுரம் புதுக்கோட்டை அரியலூர் பெரம்பலூர் ஆகிய 8 மாவட்டங்களில் ஆங்காங்கே மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. ஸ்ரீவைகுண்டம் நாசரேத் தென்திருப்பேரை சூரங்குடி வைப்பார் வேம்பார் காரைக்குடி திருப்புவனம் பழனி சிறுமலை ஆகிய இடங்களிலும் இன்று நல்ல மழை பெய்யும்.
Tags :