அமராவதி ஆற்றில் மூழ்கி 6 பேர் உயிரிழப்பு

திருப்பூர் மாவட்டம் இடுவாய் பகுதியை சேர்ந்த 30 பேர் திண்டுக்கல் மாவட்டம் மாம்பாறை பகுதியில் உள்ள முனியப்பன் சாமி கோயிலில் கிடா வெட்டு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து மீண்டும் தாராபுரம் வழியாக திருப்பூர் புறப்பட்டுவந்துள்ளனர். வரும் வழியில் தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் அனைவரும் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது 8 பேர் கும்பலாக குளிக்க செல்லவே அனைவரும் ஆழமான பகுதியில் சிக்கி நீரில் மூழ்கி உள்ளனர். இதனைக்கண்ட அவர்களோடு வந்தவர்கள் தாராபுரம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 பேரை காப்பாற்றினர்.சிகிச்சைக்கு ணைப்பி வைத்தனர். மோகன், ரஞ்சித், ஸ்ரீதர், சக்கரவரத்தி, அமீர், யுவன் உள்ளிட்ட 5 மாணவர்கள் உள்பட 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர்.இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நீரில் மூழ்கியவர்கள் உடல்களை உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags :