ஆசிரியர்களின் நெருக்கடி காரணமாக கல்லூரிமாணவி தற்கொலை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணியை சார்ந்தவர் கணேசன் மாடத்தி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இவரது மூத்த மகள் புளியங்குடி இந்து உறவின்முறை நாடார்கள் பள்ளி வளாகத்தில் செயல்பட்டுவரும் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் உடைய உறுப்புக்களான மனோ கல்லூரி செயல்பட்டு வருகின்றது. இந்த கல்லூரியில் சுமார் 800 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த கல்லூரியில் கணேசன் மாடத்தி தம்பதியினரின் மகள் பிரியா என்பவர் பி,காம் முதலாமாண்டு படித்து வருகிறார். கல்லூரியில் முதல் ஆண்டு மாணவி என்பதால் சில மாணவிகள் செல்போன்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது அதனை பிரியா வாங்கி பார்த்ததாகவும் கூறப்படுகிறது பிரியா செல்போனை கையில் வைத்திருந்த சமயம் கல்லூரியின் உடைய பேராசிரியர் முத்துமணி என்பவரும் பேராசிரியர் வளர்மதி என்பவரும் பார்த்து மாணவியை கண்டித்து சப்தம் போட்டு உள்ளனர் ஆனால் மாணவி அந்த செல்போன் தனக்கு உரியது இல்லை என்றும் அது மற்றொரு மாணவிகள் என்று தெரிவித்து அதனை கண்டு கொண்டதாக தெரியவில்லை இதனைத்தொடர்ந்து மாணவியை இரண்டு பேராசிரியர்களும் தொடர்ந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கச் சொல்லி வலியுறுத்தி வந்துள்ளனர் தான் தவறு செய்யவில்லை எப்படி மன்னிப்பு கடிதம் கொடுக்க முடியும் என்றுஅவர்களிடம் மாணவி மன்றாடியுள்ளார் ஒரு கட்டத்திற்கு மேல் இவர்களுடைய நெருக்கடி அதிகரிக்கவே மாணவி பிரியா இன்று கல்லூரி இருந்தும் கல்லூரிக்குச் செல்லாமல் அதிகாலையிலேயே வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார், மேலும் தந்தை இல்லாத மாணவி அவரது தாயார் மட்டும் வீட்டில் இருப்பதால் அவர் சென்று பார்த்த பொழுது மகள் தூக்கில் தொங்கிய கண்டு அலறி துடிக்கவே அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மாணவியின் உடலை தூக்கில் இருந்து கீழே இறக்கி காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார் அவரது உடலை கைப்பற்றி உடல்கூறு பரிசோதனைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவி 2பக்கம் கடிதம் எழுதி வைத்துள்ளதை போலீசார் கைப்பற்றியுள்ளனர் அந்த கடிதத்தில் தன்னுடைய மரணத்திற்கு முழு காரணம் ஆசிரியர்கள் தான் என்றும் அதில் முத்துமணி மற்றும் வளர்மதி ஆகியோருடைய பெயரையும் குறிப்பிட்டு உள்ளார் இன்று கல்லூரி உண்டு என்ற நிலையில் கல்லூரிக்கு திரண்டு வந்த மாணவர்கள் மாணவிகள் , மாணவி பிரியாவின் மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தனர், தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் ஆசிரியர்களை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர் கல்லூரி முதல்வர் இன்று கல்லூரி விடுமுறை என்று அறிவித்ததால் சில மாணவ மாணவிகள் மட்டும் திரும்பி சென்றனர் பல மாணவ மாணவிகள் சக மாணவி பலியானது குறித்து வேதனையில் புளியங்குடியில் முகாமிட்டுள்ளனர் தொடர்ந்து அங்கு போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன ஆசிரியர்களின் நெருக்கடி காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags : College student commits suicide due to teacher crisis