ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் 400 பேர் கொல்லப்பட்டதாக......

by Admin / 17-03-2026 09:33:57am
ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் 400 பேர் கொல்லப்பட்டதாக......

ஆப்கானிஸ்தான் காபூலில் உள்ள போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது பாகிஸ்தான் வான்வழி தாக்குதல் நடத்தியதாக தாலிபன் குற்றம் சாட்டி உள்ளது. நேற்று இரவு 9 மணி அளவில் காதலில் உள்ள 2000 படுக்கைகள் கொண்ட உமித் போதைப் பொருள் மறுவாழ்வு மையத்தின் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தாலிபான் செய்து தொடர்பாளர் தெரிவித்துள்ளார் .இந்த தாக்குதலில் குறைந்தது 400 பேர் கொல்லப்பட்டதாகவும் சுமார் 250 பேர் காயமடைந்ததாகவும் ஆப்கானிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் என கூறப்படுகின்றது. பாகிஸ்தான் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது . இது உண்மைகளை தவறாக சித்தரிக்கும் செயல் என்றும் தாங்கள் காபூல் மற்றும் நங்கர் ஹார் பகுதிகளில் மட்டுமே தாக்கியதாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது .கடந்த பிப்ரவரி 2026 முதல் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே எல்லை பிரச்சனைகள் மற்றும் வான் மொழி தாக்குதல் காரணமாக பதற்றம் அதிகரித்துள்ளது ..பாகிஸ்தான் தனது நாட்டில் நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களை காரணம் என குற்றம் சாட்டி வருவது  குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via