வீரமரணமடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்திய எஸ். பி.
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் ஹாட் ஸ்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில், பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21ம் தேதி காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்படுகிறது. இன்று கன்னியாகுமரி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் வீர வணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் IPS அவர்கள், காவல் கூடுதல் கண்காணிப்பாளர் சுப்பையா அவர்கள், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான குற்ற தடுப்பு பிரிவு காவல் கூடுதல் கண்காணிப்பாளர் மதியழகன் அவர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளினர்கள் மலர் வளையம் வைத்து 21 குண்டுகள் முழங்க இன்னுயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
Tags :