ஈரான் ஒரு மிகப்பெரிய தவறை செய்து விட்டது அதற்குரிய பலனை அது அனுபவிக்கும்-பெஞ்சமின் நெதன் யாகு

by Admin / 04-10-2024 01:03:07am
ஈரான் ஒரு மிகப்பெரிய தவறை செய்து விட்டது அதற்குரிய பலனை அது அனுபவிக்கும்-பெஞ்சமின் நெதன் யாகு

 இஸ்ரேல் மீது ஈரான் வீசிய 108 ஏவுகணைகளின் சால் வே எந்த உயிரிழப்பையும் ஏற்படுத்தவில்லை என்றும் பெரும்பாலான ஏவுகணைகள் இடை மறிக்கப்பட்டன.. ஈரான்  டெல்  அவிவ்  பகுதியில் உள்ள மூன்று ராணுவ தளங்களை குறிவைத்து தாக்கியதாக கூறியது.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன் யாகு, ஈரான் ஒரு மிகப்பெரிய தவறை செய்து விட்டது அதற்குரிய பலனை அது அனுபவிக்கும் என்கிற ரீதியில் கருத்தை வெளியிட்டுள்ளார். இஸ்ரேலுக்கு அமெரிக்கா துணை நிற்கின்றது. அதனால் எந்த தவறையும் செய்யாதீர்கள் என்று ஜோபைடன் இஸ்ரேலுக்கு முழுமையாக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

. இப்பொழுது உள்ள சூழலில் இஸ்ரேல் போரை தீவிரப்படுத்துமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் இப்பொழுது இயல்பான நிலையிலே உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களை அதே நவீன ஆயுதங்களை பயன்படுத்துகிறது. இந்த தாக்குதலை  ஈரான் முன்னெடுத்தது. இஸ்ரேல் மேற்கொள்ள இருக்கும் இந்த போரானது தீவிரமடைந்தால் அது ஈரானை நேரடியான மோதலுக்கு இழுத்து விடும்.

. தற்பொழுது ஈரான் இஸ்ரேல் மீது தொடுத்த போரால் எல்லோரும் அதை குறை கூறிக்கொண்டு இருக்கிறார்கள். இந்த போக்கு இஸ்ரேலுக்கு நல்லது என்றும் காசாவில் நடந்து கொண்டிருப்பதை திசை திருப்புவதற்காகவும் ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் தனக்கான ஆதரவை இந்த நேரத்தில் திரட்ட முடியும் என்றும் தெரிகிறது.

இஸ்ரேல் அணு  மற்றும் எண்ணெய் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதல்கள், புரட்சிகர காவலர் படைகளை அழிப்பது, ராணுவ சொத்துக்களை சேதப்படுத்துவது போன்றவை இஸ்ரேலின் இலக்காக இருக்கும்.. ஈரானின் அணுசக்தி திட்டத்தை அதன் மைய எரிசக்தி வசதிகளை அழிக்கவும் பயங்கரவாத ஆட்சியை முடிவுக்கு கொண்டு வரவும் .ஹெஸ் பொல்லா, கமாசும் முடக்கப்பட்டு விட்டதால் இப்பொழுது ஈரான் எதிர்த்து நிற்கின்றது..  யுரோனிய மற்றும் அணு தொழில்நுட்ப மையம் ஈரானின் முக்கிய  இரண்டு தளங்களை குறி வைத்து தாக்குவதே இஸ்ரேலின் நோக்கம் ஆகும்.. ஈரானில் உள்ள எண்ணெய் வயல்கள்  , பாதுகாப்பு- ராணுவ இலக்குகளை குறி வைத்து தாக்குவதன் மூலம் ஈரானின் மோசமான ஒரு பொருளாதார சூழலை உருவாக்க முடியும் என்று இஸ்ரேல் முயலலாம்..

இது மட்டும் இன்றி ஈரானிய கடற்படை தள வசதிகள் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படை கடற்படை சொத்துக்கள் இவற்றை அழிப்பது இஸ்ரேலின் இலக்காக இருக்கலாம். இதனுடைய ஈரானி ஆயுதப்படை கூட்டுத் தலைவர் முகமது பா கேரி இஸ்ரேல் தனது எல்லைக்குள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் ஈரான் பல மடங்கு தீவிரத்துடன் ஏவுகணைகளை வீச தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் ஒரு மிகப்பெரிய தவறை செய்து விட்டது அதற்குரிய பலனை அது அனுபவிக்கும்-பெஞ்சமின் நெதன் யாகு
 

Tags :

Share via