சேலத்தில் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழுக் கூட்டம்கூட நடைபெற உள்ளது.

சேலத்தில் டாக்டர் அன்புமணி தலைமையில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. டாக்டர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலுத்த வண்ணம் உள்ளது இந்நிலையில் மாறி மாறி கட்சி பொறுப்பாளர்களை நியமிப்பது நீக்குவதுமான செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நிறுவனரும் நானே தலைவரும் நானே என்று டாக்டர் ராமதாஸ் தைராபுரத்தில் தம் கட்சி நிர்வாகிகளிடம் தெரிவிக்க.. அன்பு மணியோ நான்தான் பாமகவின் தலைவர் என்று கட்சி நிர்வாகிகள் உசுப்பேத்தி விட்டுக் கொண்டே இருக்கின்றார். டாக்டர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பத்தில் இருந்து உடனிருந்து பின்னர் விலகியவர்கள் எல்லாம் இப்பொழுது அவரோடு ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் அன்புமணி ராமதாஸ் கட்சியில் உள்ள இளைய தலைமுறையை தம் பக்கம் இழுத்துக்கொண்டு அவர்களுக்கு புதிய பொறுப்புக்களை வழங்கி கட்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல வேண்டும் என்கிற ரீதியில் இயங்கி வருகிறார்.. இருவரும் மாறி மாறி பொறுப்பாளர்களின் கூட்டத்தை கூட்டிக் கொண்டிருப்பதனால் கட்சி நிர்வாகிகளில் சில தர்ம சங்கடமான சூழலை எதிர்கொண்டுள்ளனர். நேற்று எம்எல்ஏ அருள் , கௌரவத் தலைவராக இருக்கிற ஜிகே மணி இருவருக்கும் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இருவரும் அன்புமணியின் பொதுக்குழு கூட்டத்தை புறக்கணிக்கும் நோக்கத்தில் மருத்துவமனையில் சேர்ந்து உள்ளாரா என்கிற கருத்து எழுந்து உள்ளது. தந்தை --- மகன் இப்போதுபொது வெளியில் கட்சியை தர்ம சங்கடத்திற்கு உள்ளாக்கி இருப்பதை தொண்டர்கள் ஏற்றுக்கொள்ளாமல் தவித்து வருகிறார்கள்.
Tags :