இளைஞரை சரமாரியாக தாக்கிய கும்பல்

திருட்டு குற்றச்சாட்டின் பேரில் இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார். உத்தரகாண்ட் மாநிலம் ருத்ராபூரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடையில் திருடியதாக சந்தேகத்தின் பேரில் இளைஞரை கடைக்காரர்கள் அடித்து உதைத்தனர். இளைஞரை சாலையில் தள்ளிய அவர்கள், முதுகில் எட்டி உதைத்து, பலமுறை தடியால் தலையில் அடித்தனர். இதனால் அந்த வாலிபர் வலியால் துடித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Tags :