பெப்பர் ஸ்ப்ரே அடித்து உபெர் டிரைவரை தாக்கிய அமெரிக்க பெண்

by Staff / 04-08-2024 04:25:45pm
பெப்பர் ஸ்ப்ரே அடித்து உபெர் டிரைவரை தாக்கிய அமெரிக்க பெண்

நியூயார்க்கைச் சேர்ந்த கில்பேட் என்ற பெண் ஊபர் வாடகை காரை புக்செய்து, தன் தோழியுடன் பயணம் செய்துள்ளார். அப்போது கில்பேட் திடீரென தனது கைப்பையை திறந்து அதில் இருந்த பெப்பர் ஸ்ப்ரேவை எடுத்து டிரைவரின் முகத்தில் அடித்துள்ளார். இதை எதிர்பார்க்காத டிரைவர் அலறியடித்து காரைவிட்டு இறங்கினார். அவர் தான் பயணித்த வாடகைகாரின் டிரைவர் கருப்பினத்தவராக இருந்ததால் அவரை பிடிக்காமல் அந்த பெண் பெப்பர் ஸ்ப்ரேவை அடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via