அமைச்சர் மகன் வீட்டில் வருமான வரித்துறை ரெய்டு
திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் உள்ள வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட 40 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 2-வது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர் எ.வ.வேலுவின் மகன் மருத்துவர் கம்பன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் தற்போது சோதனையிட வந்துள்ளனர். மருத்துவர் கம்பன் திமுகவின் மருத்துவரணி செயலாளராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
Tags :