வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 11 லட்சம் மோசடி செய்தவர் கைது

by Staff / 31-12-2022 01:25:16pm
வேலை வாங்கி தருவதாக கூறி ரூ. 11 லட்சம் மோசடி செய்தவர் கைது

தாரமங்கலம் அருகே உள்ள மிளகாய்காரனூரை சேர்ந்தவர் துரை. இவருடைய மகன் பிரகாஷ்ராஜ் (வயது 30). இவர் கடந்த ஓராண்டுக்கு முன்பு சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை சேர்ந்த சோபா (21) என்ற இளம்பெண்ணிடம் ரூ. 7 லட்சம் வாங்கினார். இதேபோல் சோபாவின் நண்பரான கும்மிடிபூண்டியை சேர்ந்த சக்திவேல் (23) என்பவரிடம் ரூ. 4 லட்சம் பெற்றார். ஆனால் பிரகாஷ்ராஜ் வேலை வாங்கி கொடுக்கவில்லை. மேலும் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்தார். இதையடுத்து சோபா மற்றும் சக்திவேல் தாரமங்கலம் வந்து, பிரகாஷ்ராஜிடம் தங்களது பணத்தை கேட்டனர். அப்போது அவர், அவர்கள் 2 பேரையும் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தாரமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரகாஷ்ராஜை கைது செய்தனர். மேலும் மோசடி செய்த பணத்தில் பிரகாஷ்ராஜ் சொகுசு கார் மற்றும் மின்பஸ் வாங்கியதாக கூறப்படுகிறது. அதனை பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

 

Tags :

Share via