நடுரோட்டில் தீப்பிடித்த தனியார் ஆம்னி பேருந்து-11 பேர் காயம்.

கோவையிலிருந்து பெங்களூருக்கு சென்ற ஆம்னி பேருந்து சேலம், மேட்டூர் அடுத்த சாம்பள்ளி பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது பேரூந்து தீடீரென தீப்பற்றி எரிந்தது.இதில் பேருந்தில் பயணித்த பயணிகள் அலறியடித்து உயிருக்கு போராடி கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்தனர்.மேலும் அவர்களது பொருட்கள் சேதமடைந்தன.பேருந்திலிருந்து உயிர் தப்பி குதித்ததில் தீக்காயம் பட்டும் 11 பேர் காயம் அடைந்தனர்.இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்ப்பு பணிகள் துறையினர் பேருந்து முழுமையாக தீக்கிரையாகாமல் தீயைஅணைத்து கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்தனர்.இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags : நடுரோட்டில் தீப்பிடித்த தனியார் ஆம்னி பேருந்து