மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு வரம்பு ₹1 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தனது 9-வது பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2026-27 நிதியாண்டுக்கான -
மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு வரம்பு ₹1 லட்சமாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.
வருமான வரி: அப்டேட் செய்யப்பட்ட வருமான வரி கணக்கைத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் 4 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டுப் பணப்பரிமாற்றத்திற்கான வரம்பு ₹7 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
டீடிஎஸ் பிடிப்பதற்கான ஆண்டு வாடகை வரம்பு ₹6 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வளர்ச்சியைத் தொடர, பொது மூலதனச் செலவு ₹12.2 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
நகரங்களை இணைக்கும் வகையில் 7 புதிய அதிவேக இரயில் வழித்தடங்கள்உருவாக்கப்படும்.
வெளிநாடு வாழ் இந்தியர்கள் ( மற்றும் தனிநபர் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியப் பங்குகளில் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கான தனிநபர் முதலீட்டு வரம்பு 5%-லிருந்து 10% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்திய செமிகண்டக்டர் மிஷன் 2.0 தொடங்கப்படும். இது உள்நாட்டு செமிகண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருள் உற்பத்தியை வலுப்படுத்தும்.
இந்தியாவை பயோ-பார்மா உற்பத்தியின் உலகளாவிய மையமாக மாற்ற 'பயோபார்மா சக்தி' திட்டம் ₹10,000 கோடி ஒதுக்கீட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புற்றுநோய் உள்ளிட்ட 36 உயிர் காக்கும் மருந்துகள் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு மற்றும் சிறு தொழில்கள்
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் 'சாம்பியன்களாக' வளர மூன்று அடுக்கு அணுகுமுறை முன்மொழியப்பட்டுள்ளது.
'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு' வரை ஒருங்கிணைக்க உயர்நிலை நிலைக்குழு அமைக்கப்படும்.
ஜிகா் பணியாளர்கள் , சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இவர்களுக்கு அடையாள அட்டைகள் மற்றும் அரசு சலுகைகள் வழங்கப்படும்.
நிதியமைச்சர் இன்று தனது உரையில் "சீர்திருத்த எக்ஸ்பிரஸ்" என்ற பெயரில் புதிய வளர்ச்சிக்கான பாதையை முன்மொழிந்தார்.
Tags :


















