மத்திய பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்....விலை உயரும் பொருட்கள்.--விலை உயரும் பொருட்கள்.-
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (பிப்ரவரி 1, 2026) தாக்கல் செய்த மத்திய பட்ஜெட் 2026-27 முக்கிய அம்சங்கள்..
முக்கிய நிதி தரவுகள் (2026-27):
மொத்த செலவினம்₹53.5 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
மொத்த வரி வருவாய் (நிகர)₹28.7 லட்சம் கோடி என எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியியல் பற்றாக்குறை ஜி டி பி யில் 4.3% ஆக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. (கடந்த ஆண்டு இது 4.4% ஆக இருந்தது).
2030-31க்குள் இந்தியாவின் கடன்-ஜிடிபி விகிதத்தை 50±1% ஆகக் குறைக்க மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.
புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. இது எளிமையான வரி தாக்கல் மற்றும் நவீன விதிமுறைகளைக் கொண்டிருக்கும்.
புதிய வரி விதிப்பு முறையில் (New Tax Regime) ₹12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி கிடையாது என்ற சலுகை தொடர்கிறது.
வெளிநாட்டு சுற்றுலா திட்டங்கள், கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்கான TCS விகிதம் எவ்வித உச்சவரம்பும் இன்றி 2% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான வரி விலக்கு வரம்பு ₹50,000-லிருந்து ₹1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முக்கிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள்:
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நாடு முழுவதும் 1 கோடி விவசாயிகள் இணைக்கப்படுவார்கள். 10,000 உயிர்-உள்ளீடு வள மையங்கள்அமைக்கப்படும்.
புற்றுநோய் உள்ளிட்ட அபூர்வ நோய்களுக்கான 17 வகையான உயிர் காக்கும் மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரி முழுமையாக விலக்கப்பட்டுள்ளது.
நகரங்களை வளர்ச்சி மையங்களாக மாற்ற ₹1 லட்சம் கோடி மதிப்பிலான அர்பன் சேலஞ் பன்ட் 'உருவாக்கப்படும்.
'ஞான் பாரதம் திட்டத்தின் கீழ் 1 கோடிக்கும் அதிகமான பழங்கால ஏட்டுச்சுவடிகள் டிஜிட்டல் மயமாக்கப்படும்.
ஒடிசா, கேரளா மற்றும் ஆந்திராவுடன் இணைந்து தமிழ்நாட்டிலும் ரேர் எர்த் காாிடாா். அமைக்கப்பட்டு சுரங்கம் மற்றும் ஆராய்ச்சி மேம்படுத்தப்படும்.
விவசாயம், எம்.எஸ்.எம்.இ மற்றும் கல்வித் துறைகளுக்கு வங்கிகள் மூலம் ₹9.5 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
2026-27 மத்திய பட்ஜெட்டில்விலை உயரும் பொருட்கள்.-
17 வகையான புற்றுநோய் மருந்துகள் மற்றும் 7 அரிய நோய்களுக்கான மருந்துகளுக்கு சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள், மைக்ரோவேவ் ஓவன்களின் உதிரிபாகங்கள் மீதான வரி குறைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணங்களுக்கான பேக்கேஜ் செலவுகள் மற்றும் வெளிநாட்டுக் கல்விக்கான TCS வரி 5%-லிருந்து 2%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
சோலார் பேனல்கள், லித்தியம்-அயன் பேட்டரிகள் மற்றும் மின்சார வாகனங்களுக்கான (EV) உதிரிபாகங்கள் விலை குறையும்.
தோல் காலணிகள் மற்றும் தோல் சார்ந்த பொருட்கள் மலிவாகும்.
விளையாட்டு உபகரணங்களுக்கான வரி குறைக்கப்பட்டுள்ளது.
கடல் உணவு ஏற்றுமதி மற்றும் உற்பத்திக்கான உள்ளீட்டுப் பொருட்கள் மீதான வரி குறைப்பு.
விமான உற்பத்தி மற்றும் பராமரிப்புக்கான பாகங்கள் விலை குறையும்.
விலை உயரும் பொருட்கள்.-
சிகரெட்டுகள், பீடி, பான் மசாலா மற்றும் புகையிலை பொருட்களுக்கான வரி உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலையும் உயரும்.
விலையுயர்ந்த கடிகாரங்கள் மற்றும் உயர் ரக லேப்டாப்களின் விலை அதிகரிக்கக்கூடும்.
இறக்குமதி செய்யப்படும் குடைகள் மற்றும் அதன் பாகங்கள் மீதான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.
நிதி பரிவர்த்தனைகள்: பங்குச்சந்தை வர்த்தகத்தில் மீதான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
சில வகையான உரங்கள் மற்றும் அதன் மூலப்பொருட்கள் மீதான வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளதால் அவற்றின் விலை உயர வாய்ப்புள்ளது.
ஏடிஎம் (ATM) இயந்திரங்கள் மற்றும் சினிமா படப்பிடிப்பு கருவிகளின் விலை உயரும்.
இறக்குமதி செய்யப்படும் காபி வறுக்கும் மற்றும் தயாரிக்கும் இயந்திரங்களுக்கான வரி விலக்கு நீக்கப்பட்டுள்ளது.
Tags :















.jpg)


.jpg)
