உடலை வலிமையாக்கும் கீரை

by Editor / 06-09-2021 10:16:01am
உடலை வலிமையாக்கும் கீரை

கீரையில் உடலுக்கு தேவையான இரும்பு சத்து, சுண்ணாம்புச் சத்து, நார்ச் சத்து, பீட்டா கரோடின், வைட்டமின்-சி, பி-காம்ளக்ஸ், கால்சியம், பொட்டாசியம், மாங்கனீசு போன்ற பல்வேறு சத்துக்கள் இருக்கின்றன. அதனால், ஏதாவது ஒரு கீரையை தினமும் எடுத்துக் கொள்வது உடலுக்கு நல்லது. சிறுவயது முதலே கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், எந்த நோய் நொடியும் இன்றி வாழும் காலம் வரை ஆரோக்கியமாக வாழலாம்.

அதில் முக்கியமான கல்யாண முருங்கையின் பயன் முளைக்கீரை, அகத்தி கீரை, புளிச்ச கீரை, பொன்னாங்கண்ணி கீரை, பசலைக்கீரை, வெந்தயக்கீரை, முருங்கை கீரை, கல்யாண முருங்கை கீரை, தண்டு கீரை, சிறுகீரை, அரைக்கீரை, கொத்தமல்லி கீரை, மணத்தக்காளி கீரை, வல்லாரை கீரை முடக்கத்தான் கீரை, சுக்கா கீரை என நாற்பதுக்கும் மேற்பட்ட கீரை வகைகள் உள்ளன.

கிராமப்பகுதிகளில் சாதாரணமாக வேலி ஓரங்களில் வளரும் தன்மை கொண்ட கல்யாண முருங்கையில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி, இரத்தப் போக்கு போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கிறது.

மாதவிடாயால் ஏற்படும் உடல் உபாதை நின்றபின், காலையில் வெறும் வயிற்றில் கல்யாண முருங்கை சாறை மூன்று மாதங்கள் வரை குடித்து வந்தால் தாய்மைப்பேறு உறுதியாகும்.

கல்யாண முருங்கை இலைகளுடன் கஸ்தூரி மஞ்சள் சேர்த்து குளித்து வர சொறி சிரங்கு, தேமல் போன்ற சரும பாதிப்புகள் குணமாகும்.

வயிற்றுப் பூச்சி மற்றும் சளித் தொல்லையால் அவதிப்படும் குழந்தைகளுக்கு கல்யாண முருங்கை இலையுடன் சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து சாறை வெறும் வயிற்றில் கொடுத்து வர வாந்தி, மலம் ஆகியவற்றின் மூலமாக சளி பூச்சி வெளியேறும்.

கல்யாண முருங்கையின் பட்டைக்கு விஷத்தை முறிக்கும் தன்மை இருப்பதால், இதன் பட்டையுடன், பூண்டு சிறிதளவு சேர்த்து தண்ணீரில் நன்றாகக் கொதிக்க வைத்த பின்னர் நன்கு வடிகட்டி அருந்தி வர, பாம்பு போன்ற விஷ பிராணிகள் கடியில் இருந்து மீள முடியும்.

கல்யாண முருங்கை இலைகளுடன், 12 வெங்காயம், துருவிய தேங்காய் ஆகியவற்றை நெய்யில் வதக்கி தினமும் ஐந்து தடவை சாப்பிட்டு வந்தால் குழந்தை பெற்ற பெண்களுக்கு தாய்ப்பால் நன்றாக சுரக்கும்.

காய்ச்சலை குணப்படுத்தி, பலவீனமான உடலை வலிமையாக்கும் ஆற்றல் கல்யாண முருங்கைக்கு உண்டு.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் கல்யாண முருங்கை கீரையுடன், கைப்பிடி அளவு மிளகு, பூண்டு சேர்த்து சூப் தயாரித்துக் குடித்து வர நல்ல பலன் கிடைக்கும்.

 

Tags :

Share via