பொறியியல் கல்லூரியில் சக மாணவர்களால் இரும்பு கம்பி மற்றும் கத்தியால் கொடூரமாக மாணவர் கொலை
கோவை தனியார் பொறியியல் கல்லூரியில் சக மாணவர்களால் இரும்பு கம்பி மற்றும் கத்தியால் கொடூரமாக மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதுவழையை உருவாக்கி உள்ளது. கள்ளக்குறிச்சியை சேர்ந்த அமுதன் என்கிற மாணவர் தனியார் பொறியியல் கல்லூரி மூன்றாம் ஆண்டு படித்து வருகிற அவருக்கும் விடுதியில் சமையல் ஊழியருக்கும் இடையே சண்டை நடந்ததாகவும் அதன் காரணமாக அவர் விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. நிலையில் கல்லூரி விடுதியில் போதை பொருள்களை மாணவர்கள் பயன்படுத்துவதாக கொலை கொண்ட மாணவர் கல்லூரி நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக தகவல் அளித்ததாகவும் அதனை கல்லூரி நிர்வாகம் எதிரணி மாணவர்களிடம் தெரிவித்ததன் காரணமாக 20 பேர் கொண்ட மாணவர்கள் மாணவன் அமுதனை தாக்கியதாக அவரது பெற்றோர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். காவல்துறை தரப்பு அமுதன் மற்றும் அவரது நண்பர்கள் முகமூடி அணிந்து இரண்டாம் ஆண்டு மாணவர்களின் அறைக்குள் புகுந்து கத்தியை காட்டி விரட்டி செல்போன்களை பறித்து சென்றுள்ளதாகவும் இந்த திருட்டில் அமுதனுக்கு தொடர்பு இருப்பவை அறிந்த இரண்டாம் ஆண்டு மாணவர்கள் அதற்கு பலி வாங்க திட்டமிட்டதாகவும் தெரிவித்துள்ளது. அமுதனும் அவரது நண்பர்ஸ்ரீ மானும் மலுமிச்சம்பட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஒரு கும்பல் அவர்களை கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு கடத்தி சென்று இரும்பு கம்பி மற்றும் ஆயுதங்களால் கொடூரமாக தாக்கியதாகவும் மதிய வேளையில் அவருக்கு கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சொல்லப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. இது தொடர்பாக காயமடைந்த ஸ்ரீமான் கொடுத்த புகாரின் அடிப்படையில் செட்டிபாளையம் காவல்துறையினர் கொலை வழக்கு பதிவு செய்து ஐந்து கல்லூரி மாணவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே தலைமறைவாக உள்ள மாணவர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
Tags :


















