தமிழகத்தில் 569 வேட்புமனுக்கள் நிராகரிப்பு
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற ஏப்ரல் 19-ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 20-ந்தேதி தொடங்கி 27-ந்தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் போட்டியிட தமிழகத்தில் 238 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,741 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இதில் இதுவரை 933 வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாகவும், 569 மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரபூர்வ தகவல் இன்று வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. சில இடங்களில் பிரபலமான வேட்பாளர்கள் வேட்புமனுவில் உள்ள தவறுகள் சுட்டிக்காட்டப்பட்ட, திருத்தி எழுதப்பட்ட பின் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
Tags :