மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ஒருவர் பலி
தூத்துக்குடி சங்கர் காலனியை சேர்ந்தவர் சைலபதி(வயது 51). இவர் நேற்று முன்தினம் இரவு துறைமுகம் மதுரை பைபாஸ் சாலையில் மீன்வளக் கல்லூரி அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த லாரி ஒன்று மோதியதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த அவர், உடல் நசுங்கி பலியானார். ஆனால் அவர் மீது மோதிய லாரி நிற்காமல் சென்று விட்டது. இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் ச ெசன்ற லாரி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :



















