சாதிய மோதலை களைய முதல்வரிடம் ஒருநபர் குழு பரிந்துரையை சமர்ப்பித்தது.

by Editor / 18-06-2024 05:22:25pm
சாதிய மோதலை களைய முதல்வரிடம் ஒருநபர் குழு பரிந்துரையை சமர்ப்பித்தது.

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்களில் நடக்கும் சாதிய மோதலை தடுப்பதற்காக தமிழ்நாடு அரசு சார்பில் நீதியரசர் சந்துரு சார்பில் அமைக்கப்பட்ட ஒரு நபர் குழு இன்று (ஜூன் 18) தனது அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதில் 20 பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்ற அரசை அறிவுறுத்தி உள்ளது. குறிப்பாக பள்ளிகளில் மாணவர்களின் சாதியை குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக் கயிறு கட்டுதல், மோதிரங்கள் அணிதல், நெற்றியில் பொட்டு வைத்தல், சைக்கிளில் பெயிண்ட் அடித்தல் ஆகியவற்றை உடனடியாக தடை செய்யுமாறு அந்த குழு தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.

மேலும் முக்கியமாக தென் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு, மோதல் போன்ற சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுகின்றன. இது போன்ற மோதல்களை தடுப்பது தொடர்பாக தமிழக அரசு, ஓய்வு பெற்ற சந்துரு தலைமையில் ஒரு நபர் குழுவை அமைத்தது. இது தொடர்பான பரிந்துரையில் மாணவர்களின் வருகை பதிவேட்டில் எக்காரணம் கொண்டும் சாதி பெயர் இடம்பெறக் கூடாது உட்பட பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இது நடைமுறைக்கு வந்தால் மாணவர்களிடையே சாதிய வன்முறைகள் இனி தடுக்கப்படும் எனவும், தமிழக அரசின் இந்த நடவடிக்கை பாராட்டுதலுக்குரியது என்றும் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

Tags : சாதிய மோதலை களைய முதல்வரிடம் ஒருநபர் குழு பரிந்துரையை சமர்ப்பித்தது.

Share via

More stories