தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார்-முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஆகஸ்ட் 8) சென்னை கோட்டூர்புரத்தில் தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார். கடந்த 2020ம் ஆண்டு மத்திய அரசு அமல்படுத்திய தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக, மாநில அளவில் புதிய கல்விக்கொள்கையை முதல்வர் வெளியிட்டு இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உட்பட பலரும் கலந்துகொண்டனர்.இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் கலாச்சாரம், பண்பாடு, வரலாறு மாறுபாடு இருக்கும். அங்குள்ள மக்களின் தேவையை புரிந்துகொண்டு உருவாகும் கல்வி முறை மாநில கல்வி கொள்கையாக அறிவிக்கப்படுகிறது. மாநில மக்களுக்கு தேவையான கல்வி சூழலை உருவாக்கி அனைவருக்குமான கல்வியை கொண்டு சேர்ப்பது மாநில கல்வி கொள்கையின் முக்கிய அம்சம் ஆகும்.
Tags : தமிழ்நாடு மாநில கல்விக்கொள்கையை வெளியிட்டார்-முதல்வர் மு.க. ஸ்டாலின்.