தமிழக வெற்றி கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் கருத்தரங்கு

தமிழக வெற்றி கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களின் கருத்தரங்கு கோவை தனியார் கல்லூரியில் நடந்தது. அந்நிகழ்வில் கலந்து கொண்ட கட்சியின் தலைவர் விஜய், கோவை என்றாலும் கொங்கு பகுதி என்றாலும் மண்ணோட மக்களோட மரியாதை தான் முதலில் ஞாபக வரும் என் நெஞ்சில் குடியிருக்கும் கோவை மக்களுக்கும் தோழர்களுக்கும் வணக்கம்..
இங்கு நடப்பது வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பட்டறை பெயர்தான் பயிற்சி பட்டறை ஆனால் இங்கு ஏதோ பெரிய நிகழ்ச்சி நடப்பது போன்று உள்ளது இந்த வாக்குச்சாவடி முகவர்கள் சந்திப்பு ஓட்டு சம்பந்தப்பட்டதாக இருக்கும் ஆனால் என்னை பொருத்தவரைக்கும் இது ஓட்டுக்காக நடக்கும் சந்திப்பு கிடையாது என்னடா நான் இப்படி சொல்கிறேன் என நீங்கள் நினைக்கலாம் நாம் தேர்தல் அரசியல் தான் இருக்கிறோம் என்று உங்களுக்கு கேள்விகள் எல்லாம் அதில் தப்பில்லை ஏனென்றால் ஆட்சி அதிகாரம் என்றால் அது ஓட்டு சம்பந்தப்பட்டதுதான் நாம் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைப்பதே மக்களுக்காகத்தான் மக்களின் நலனுக்காகத்தான் இந்த பயிற்சி பட்டறையில் மக்களிடம் எப்படி ஓட்டு வாங்க போகிறோம் என்று மட்டுமே பேசப்போவதில்லை .அது முக்கியம்தான் அதையும் தாண்டி நாம் மக்களுடன் எப்படி ஒன்றிணை போகிறோம் என்பதற்காக தான் பயிற்சி பட்டறை. இதற்கு முன்பு நிறைய பேர் வந்திருக்கலாம் ,போயிருக்கலாம். நிறைய பதிவுகளை சொல்லி ஆட்சி பிடித்திருக்கலாம். அதெல்லாம் பழைய கதை இனிமேல் அது நடக்காது நடக்க விடப் போவதும் கிடையாது .நமது கட்சியின் மீது மக்களிடம் நம்பிக்கையை கொண்டு வரப் போவது வாக்குச்சாவடி முகவர்கள் தான். நீங்கள் ஒவ்வொருவரும் போர் வீரனுக்கு சமம் .நாம் ஏன் வந்து இருக்கிறோம். எதற்கு வந்திருக்கிறோம் .எப்படிப்பட்ட ஆட்சி அமைக்கப் போகிறோம் என்று மக்களிடம் எடுத்துச் சொல்லுங்கள். உங்களுக்கு என்ன அரசியல் அனுபவம் இருக்கிறது என்று உங்களை கண்டிப்பாக கேட்பார்கள் .ஆனால் ,நீங்கள் யார் எப்படிப்பட்டவர்கள் உங்கள் திறன் எப்படி என்று எனக்குத் தெரியும். நம்மிடம் என்ன இல்லை .மனதில் நேர்மை இருக்கிறது.
கரை படியாத அரசியல் செய்ய நம்பிக்கை இருக்கிறது ..லட்சியம் இருக்கிறது. உழைப்பதற்கு தெம்பு இருக்கிறது. பேசுவதற்கு உரிமை இருக்கிறது. செயல்படுவதற்கு திறமை இருக்கிறது .அர்ப்பணிப்பு குணம் இருக்கிறது .களம் தயாராக இருக்கிறது .இதற்கு மேல் என்ன வேண்டும். நம்பிக்கையுடன் இருங்கள் .நல்லதே நடக்கும் என்று தமிழில் உரையில் வாக்குச்சாவடி முகவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக அவருடைய பேச்சு அமைந்திருந்தது. இன்று இரண்டாவது நாள் நிகழ்ச்சி ஞாயிறு தொடங்குகிறது.

Tags :