ஈரானிய ட்ரோன் தாக்குதலில் துபாய்விமான நிலையத்திற்கு அருகே இருந்த எரிபொருள் தொட்டி ஒன்றில் தீப்பிடித்தது.
இன்று அதிகாலை ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் ஈரானுக்கும் இடையே நிலவும் போர் சூழலில் ஈரானிய ட்ரோன் தாக்குதலில் துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே இருந்த எரிபொருள் தொட்டி ஒன்றில் தீப்பிடித்தது .பாதுகாப்பு கருதி துபாய் சர்வதேச விமான நிலையத்தில் விமான செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சில விமானங்கள் துபாய் வேர்ல்ட் சென்ட்ரல் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டன .இந்த தீ விபத்து சிவில் பாதுகாப்பு படையினரால் விரைவாக கட்டுப்படுத்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை .இந்த விபத்தில் ஈரான் முதல் முறையாக செஜ்ஜில் என்ற ஏவுகணையை ஏவியதாக கூறப்படுகிறது. இந்த வகை ஏவுகணை வான் பாதுகாப்பு அமைப்புகளிடமிருந்து தப்பிக்கும் திறன் கொண்டது.
Tags :


















