வெண்பொங்கல் செய்வது எப்படி?
தேவை
பச்சரிசி – 250 கிராம்
நெய் அல்லது டால்டா – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 600 மி.லி
கருவேப்பிலை – சிறிதளவு
வறுத்த பாசிப்பருப்பு – 50 கிராம்
மிளகு, சீரகம் – 1 டீஸ்பூன்
முந்திரிப்பருப்பு – சிறிதளவு
உப்பு – சிறிதளவு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் 600 மி.லி. நீர் ஊற்றி அடுப்பில் வைத்து பச்சரிசியையும், பாசிப்பருப்பையும் களைந்து போட்டு உப்பு போட்டு குழைய வேக வைத்து இறக்கவும். மற்றொரு சட்டியில் நெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, சீரகம், முந்திரிப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு சிவக்க வறுத்தவுடன் சாதத்துடன் கலந்து கிளறிவிட்டு இரண்டு நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.
Tags :